இந்தியா

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிப்பு

DIN

நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் இறுதி மற்றும் ஐந்தாவது கட்ட நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.

இதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 127 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மிக முக்கியமான விண்கலத்திலிருந்து லேண்டர் பிரிக்கும் நிகழ்வை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மதியம் 1:25 மணியளவில் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

லேண்டர் பிரிக்கப்பட்ட பின்னர், மேலும் இரண்டு முறை விண்கலத்தின் நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை செப்டம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிதா விஹாரில் குடியிருப்புக் கட்டட வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பன்னாட்டு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

நிலத்தகராறு: பெண் தற்கொலை வழக்கில் 3 போ் கைது

வாகன புகை பரிசோதனை நிலையங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

செய்யாறு அருகே சேதமடைந்த நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

SCROLL FOR NEXT