இந்தியா

பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்கள்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் கைது

PTI


ராய்ப்பூர்: பிரமாணப் பத்திரத்தில் போலியான தகவல்கள் அளித்தக் குற்றத்துக்காக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி கைது செய்யப்பட்டார்.

2013 சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது அமித் ஜோகி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் வசிக்கும் பகுதி மற்றும் அவர் பிறந்த தேதி தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்று கொடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி (73) மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்த போலி சாதிச்சான்று விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT