"செயற்கை நிறம் கொண்ட தேநீரைப் பருகுவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்'
செயற்கை நிறம் கொண்ட தேநீரைப் பருகுவது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று இந்திய தேநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
செயற்கை நிறம் கொண்ட தேநீரைப் பருகுவது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று இந்திய தேநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேநீர் இந்தியாவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இதில் இயற்கையாக நிகழும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இருப்பினும், பிரபலமில்லாத நிறுவனங்கள், தொழில்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் செயற்கை நிறத்தால் கலப்படம் செய்யப்படுகிறது. இது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பாமரமக்களுக்கு தெரியாது.
தேயிலையில் தீங்கு விளைவிக்கும் நிறங்களைச் சேர்ப்பது பற்றி தெரியாததாலும், மலிவான விலை என்பதாலும், நுகர்வோர் தொடர்ந்து அவற்றை வாங்குகிச் செல்கின்றனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், குறிப்பிட்ட உணவுப் பொருள்கள் சிலவற்றிற்கு செயற்கை நிறங்களை சேர்க்க அனுமதிக்கிறது.
Advertisement
ஆனால் தேநீர் அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. என்றாலும், நுகர்வோர் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு நிறங்களை கலப்படம் செய்வதை தடைசெய்யப்பட்டுள்ளது. பல வண்ணமயமான பிரசாரங்கள் மூலம் விற்கப்படும் தேயிலை தூள்களின் தரம் அறிந்து, செயற்கை நிறமில்லாதவற்றை கண்டறிந்து நுகர்வோர்கள் பயன்படுத்த வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.