இந்தியா

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் சொல்ல அவரது டிவிட்டர் பக்கத்தைத் தேடியவரா நீங்கள்?

DIN


இஸ்ரோ தலைவர் சிவனின் பெயரில் தனியாக டிவிட்டர் கணக்கு இல்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய சந்திரயான்-2 விக்ரம் லேண்டர், தற்போது இருக்கும் இடம் தெரிய வந்துள்ளது.

நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் படம்பிடித்து அனுப்பியுள்ளது. அதனுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சந்திரயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்த நிலையில், அத்திட்டம் குறித்து ஏராளமான டிவிட்டர் பயனாளர்கள் சிவனின் டிவிட்டர் பக்கத்தை தேடினர்.

ஆனால், கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் ஏராளமான டிவிட்டர் பக்கங்கள் இருப்பதால் அவை, இஸ்ரோ தலைவர் சிவனின் டிவிட்டர் பக்கங்கள் என்று பொதுமக்கள் கருதினர்.

இந்த நிலையில், கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் இருக்கும் டிவிட்டர் பக்கங்கள் போலியானவை, என்றும், இஸ்ரோவுக்கு மட்டுமே டிவிட்டரில் கணக்கு உள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தனியாக டிவிட்டர் கணக்கு இல்லை என்று இஸ்ரோவின் டிவிட்டர் பக்கத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT