கோப்புப் படம் 
இந்தியா

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் புதன்கிழமை வைக்கப்பட்டார். 

DIN

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் புதன்கிழமை வைக்கப்பட்டார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்து ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்றதை அடுத்து தெலுங்குதேசம் தலைவர்கள் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நரஸரபேட்டா, சாத்தேனபல்லே, பல்நாடு மற்றும் குஜராலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இப்பேரணியை நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT