இந்தியா

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

DIN


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுள்ள மனிதர்களால் இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (எம்பி-ஏடிஜிஎம்) வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
இந்தப் பரிசோதனையை, பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) குழுவினர் மேற்கொண்டனர். 
ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள ஏவுதளத்தில், முக்காலி போன்ற சட்டத்தின் மீது பொருத்தப்பட்டிருந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை டிஆர்டிஓ குழுவினர் மூலம் ஏவப்பட்டது. அந்த ஏவுகணை, தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கியின் மாதிரியைச் சென்று துல்லியமாகத் தாக்கி அழித்தது. பீரங்கியில் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து இலக்குகளையும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
இதன்மூலம், மனிதர்களால் இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. மேலும், இந்தச் சோதனை மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்தச் சோதனை வெற்றியடைந்ததற்காக டிஆர்டிஓ குழுவினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT