இந்தியா

ஆசியான் நாடுகளின் மாணவர்களுக்கு ஆய்வு படிப்புத் திட்டம் தொடக்கம்

DIN

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்,  இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அரசின் நிதியுதவியுடன் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை பயில்வதற்கான திட்டத்தை தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில், 3 கட்டங்களாக, மொத்தம் 1,000 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் கீழ் பயில்வதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளத்தை எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தத் திட்டத்தினால், இந்தியாவும், ஆசியான் நாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும். செயற்கை நுண்ணறிவு, குறியீடுகளை படிக்கும் இயந்திரங்கள், வினைபுரியும் பொருள்கள், நவீன உற்பத்தி முறை, பயோ மெடிக்கல் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
தில்லி ஐஐடி இந்த திட்டத்தை ஒருங்கிணைக்கும். இத்திட்டத்துக்காக, மனித வள மேம்பாட்டுத் துறை ரூ.300 கோடி செலவிடவுள்ளது. நிகழாண்டில் 250 மாணவர்கள், அடுத்த ஆண்டில் 300 பேர், அதற்கு அடுத்த ஆண்டில் 450 பேர் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
ஆசியான் அமைப்பில், புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT