இந்தியா

உள்நாட்டு பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் அழியும்: முக்தார் அப்பாஸ் நக்வி

DIN

உள்நாட்டு பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் அழிந்துவிடும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
விரக்தியின் உச்சத்தில் உள்ள பாகிஸ்தான் இந்தியாவில் எப்படியாவது பிரிவினை கருத்துகளை வளர்த்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த வேண்டுமென்று தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. 
இதற்காக அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் இந்தியாவில் ஆதரவுக் குழுக்களை ஏற்படுத்த முயலுகின்றன. ஆனால், இந்திய முஸ்லிம்களின் தேசபக்தி முன்பு அவர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அல்-காய்தா, ஐஎஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாலும் கூட இந்தியாவில் தடம் பதிக்க முடியவில்லை என்பதை அவர்கள் இப்போது வரை உணரவில்லை. இதற்கு இங்குள்ள முஸ்லிம்கள் உறுதியான தேசியவாதிகளாக இருப்பதே காரணம். பயங்கரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதனை நமது நாட்டு முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள். இறைவன் காட்டிய அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தின் வழியில்தான் அவர்கள் நடப்பார்கள் என்பது பாகிஸ்தானுக்கு இப்போதுவரை புரியவில்லை.
அதே நேரத்தில் பயங்கரவாதம் என்பது பாகிஸ்தான் மண்ணின் மரபாக மாறிவிட்டது. பயங்கரவாதம் என்ற கொடூர அரக்கனின் பிடியில் சிக்கியுள்ள அந்த நாடு, அதனாலேயே அழிந்துவிடும். ஏற்கெனவே, சர்வதேச சமுதாயத்தால் பாகிஸ்தான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
எனினும், ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி மீண்டும் அவமானத்தை பாகிஸ்தான் சந்தித்தது. சிறப்பு அந்தஸ்தை பயன்படுத்தி அந்த மாநிலத்தில் இதுவரை பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வந்தது. இப்போது பிரதமர் மோடி அரசு அதனைப் பறித்துவிட்டதால், பாகிஸ்தான் செய்வதறியாது திகைப்பில் உள்ளது. இனி, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றார் நக்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT