இந்தியா

கருப்புப் பண மோசடி வழக்கு: மொயின் குரேஷியின் 2 சொத்துகள் முடக்கம்

DIN


சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கில், தில்லியிலுள்ள பண்ணை வீடு, பிகானீரிலுள்ள பழங்கால கோட்டை ஆகியவற்றை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். இவ்விரு சொத்துகளும், குரேஷியின் போலி நிறுவனங்களின் பெயரில் உள்ளன.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மொயின் குரேஷியால் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்களின் பெயரில் தில்லியிலும், ராஜஸ்தான், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் அசையா சொத்துகள் உள்ளன. இதில், தில்லியின் சத்தர்பூர் பகுதியிலுள்ள பண்ணை வீடு, ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்திலுள்ள ஒரு பழங்கால கோட்டை ஆகியவை, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT