இந்தியா

பாதுகாப்புத்துறை பொருள்கள் மீதான வரிவிலக்கு வரவேற்கத்தக்கது: பாதுகாப்புத்துறைச் செயலர் அஜய் குமார்

DIN

உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும். இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

கோவா தலைநகர் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

அப்போது, 2024-ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புத்துறை பொருள்களுக்கு ஜிஎஸ்டி மற்றம் ஐ-ஜிஎஸ்டி ஆகிய வரிகளில் இருந்து விலக்கு அளித்து நடவடிக்கை எடுத்தார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறைச் செயலர் அஜய் குமார் கூறுகையில், பாதுகாப்புத்துறை பொருள்கள் மீதான வரி விலக்கு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது நாட்டின் பாதுகாப்புத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT