இந்தியா

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: ஹூஸ்டன் நகரில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

DIN

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் வரும் 27-ஆம் தேதி காலை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் வரும் 22-ஆம் தேதி நடத்தும் மோடி நலமா? நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு 21-ஆம் தேதி 7 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றார். செப்.21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின் போது, ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் இடையே, இருநாடுகளுக்கிடையேயுள்ள உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அதையடுத்து வரும் 24-ஆம் தேதி  நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை மோடி நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றிய பின்னர் அன்றைக்கு மதியம் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

இந்நிலையில், ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி மைதானத்தின் அருகே பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பிரமாண்டப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கார் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT