இந்தியா

எல்லை கொடியிறக்க நிகழ்ச்சிக்கு போலி அனுமதிச் சீட்டு: "எக்ஸ்பீடியா' மீது பிஎஸ்எஃப் புகார்

DIN

அட்டாரி-வாகா எல்லையில் தினமும் நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்கு போலியான சிறப்பு அனுமதிச் சீட்டுகளை விற்பனை செய்வதாக இணையதள சுற்றுலா சேவை நிறுவனமான "எக்ஸ்பீடியா' மீது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) புகார் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் காவல்துறையிடம் பிஎஸ்எஃப் அளித்துள்ள புகார் மனுவில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அட்டாரி-வாகா எல்லையில் தினந்தோறும் நடைபெறும் புகழ் மிக்க கொடியிறக்க நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க எல்லைப் பாதுகாப்புப் படை விரிவான வசதிகளை செய்து தருகிறது.

அந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

எனினும், பன்னாட்டுக் குழுமமான எக்ஸ்பீடியா, தனது துணை நிறுவனங்களான எக்ஸ்பீடியா.காம் மற்றும் டாக்ஸிபஜார் மூலம், கொடியிறக்க நிகழ்ச்சிக்கான சிறப்பு அனுமதிச் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

ஒவ்வொரு அனுமதிச் சீட்டுக்கும் ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், கொடியிறக்க நிகழ்ச்சிக்கு பிஎஸ்எஃப் கட்டணம் பெறுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது எல்லைப் பாதுகாப்புப் படையின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் புகார் மனுவின் அடிப்படையில் பஞ்சாப் காவல் துறை எக்ஸ்பீடியா குழுமத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT