ஆந்திர துணை முதலமைச்சர் புஷ்பா ஸ்ரீவாணி 
இந்தியா

நடிகராக மாறிய துணை முதலமைச்சர்: இது ஆந்திரா ஸ்பெஷல்! 

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படத்திற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் நடிகராக மாறிய சுவராஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

IANS

அமராவதி: இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படத்திற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் நடிகராக மாறிய சுவராஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவர் புஷ்பா ஸ்ரீவாணி. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கும் இவரர்தான் தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார்.

பக்ருதி அதிதி தேவோ பவா என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் "அம்ருத பூமி" ஆனந்த் என்பவர் இயக்கும் இந்தப் படமானது, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக உருவாக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான  ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

அங்குள்ள ஒரு பழங்குடியினர் நலத்துறை பள்ளியிலும், அருகில் உள்ள வயல்களிலும் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்தார்.  

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாகும் வகையில் படத்தின் கதை அமைநதுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT