இந்தியா

மகாராஷ்டிரம்: பாஜக-சிவசேனை தொகுதிப் பங்கீடு இன்று அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை இடையிலான தொகுதிப் பங்கீடு விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.

DIN


மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை இடையிலான தொகுதிப் பங்கீடு விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இதனை செய்தியாளர்களிடம் கூட்டாக அறிவிப்பார்கள் என்று அந்த மாநில பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் சமஅளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்புக் கொண்டன. ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. அதன் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டதால், அதன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறி, மகாராஷ்டிரத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட அந்த மாநில பாஜக தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இது சிவசேனை தரப்புக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 122 தொகுதிகளில் வென்றது. அந்த தொகுதிகள் அனைத்தையும் மீண்டும் தக்கவைக்க வேண்டுமென்று பாஜக விரும்புகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் சிவசேனை 64 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. தேர்தலுக்குப் பிறகுதான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. எனவே, இந்தமுறை அதிக தொகுதிகளை சிவசேனைக்கு விட்டுத்தர மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் விரும்பவில்லை.
இந்த சூழ்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு விவரம் செவ்வாய்க்கிழமை முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT