இந்தியா

இந்தியாவின் இந்த விமான நிலையத்தில்தான் முதல் முறையாக முழு உடல் ஸ்கேன் வசதி அறிமுகமாகிறது!

UNI

அகர்தலா: இந்தியாவின் முதல் மனித உடல் ஸ்கேனர் உள்ளிட்ட பெரும்பாலான நவீன வசதிகள் அகர்தலாவில் உள்ள மகாராஜ் வீர் விக்ரம் விமான நிலையத்தில் வரவிருக்கிறது.

ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தில் நிறுவப்படும், இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விமான நிலைய நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

 இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ), வடகிழக்கு செயல் தலைவர் சஞ்சீவ் ஜிண்டால், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் பேசியதாவது, அனைத்தையும் முடித்து, சேவைகளை நிறுவிய பின், அதை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், "இந்த விமான நிலையம் நாட்டின் முதல் விமான நிலையமாக இருக்கும், இது விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளையும் முழு மனித உடல் ஸ்கேன் செய்யும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

அகர்தலாவின் புதிய முனைய கட்டடம் 1200 பேரை ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையிலும், அனைத்து நவீன வசதிகளுடன் ரூ.4338 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்று ஜிண்டால் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT