இந்தியா

ஆதாருடன் 'பான்' எண்ணை இணைக்க 30-ம் தேதி கடைசி நாள்: இணைக்காவிட்டால்.? 

DIN

புதுதில்லி: ஆதாருடன் பான் எண்ணை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பின்னரும் ஆதாருடன், பான் எண் இணைக்கப்படவில்லை எனில், அந்த குறிப்பிட்ட பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதித்துறை எச்சரித்துள்ளது. 

பின்பு, அந்த அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT