இந்தியா

கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை: கேரள அரசு 

DIN

வெளியேற்றும் பணி விரைவில் தொடங்கும்: கேரள அரசுகொச்சி, செப். 28: கேரள மாநிலம், கொச்சியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணி விரைவில் தொடங்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138 நாள்களுக்குள் இடிக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களிடம் மாநில தலைமைச் செயலர் டாம் ஜோஸ் சனிக்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுபடி, குடியிருப்பு கட்டடங்கள் இடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமும் வழங்கப்படும். கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டுபவர்களின் சொத்துகளை முடக்கி வைக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு, உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். தேவைப்படுபவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதி அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும். கட்டடத்தை இடிப்பதற்கான பணி அக்டோபர் 9-ஆம் தேதிக்கு மேல் தொடங்கும்  என்று டாம் ஜோஸ் கூறினார்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில், "மரடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு குறைந்தபட்சம் 4 நாள்கள் தேவைப்படும். குடியிருப்பு கட்டடங்களை இடிப்பதற்கு 90 நாள்கள் தேவைப்படும். அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு 30 நாள்களுக்கு மேல் ஆகும். அனைத்து பணிகளையும் முடிப்பதற்கும் 138 நாள்கள் ஆகும். அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் கட்டடத்தை இடிப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்' என்று கூறப்பட்டிருந்தது. அதையடுத்து 138 நாள்களுக்குள் அந்தக் குடியிருப்புகளை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT