இந்தியா

பிகாரில் இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை: 20 பேர் பலி

DIN

பாட்னா: பிகாரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியதால் இருந்தே மகாராஷ்டிர, பிகார், மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்திலுள்ள அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

பிகார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பிஹார் தலைநகர் பாட்னாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையினால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.

பிகார் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புகழ்பெற்ற நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவனைக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குளாகினர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்நதுள்ளதால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இதனிடையே பிகார் மாநிலத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT