இந்தியா

கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் தனிமை வார்டில் தற்கொலை

ANI

ஷாம்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2032 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 58 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , ‘ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இன்னும் அவரது கரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT