இந்தியா

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை: உள்துறை அமைச்சகம் 

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த 24-ஆம் தேதி மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வருகிறவா்கள், விளையாடுகிறவா்கள், வாகனங்களில் செல்பவா்கள் ஆகியோரைக் கண்டறிந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை மொத்தம் 34,178 வழக்குகளைப் பதிவு செய்து 38,387 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். 

ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 28,040 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.14 லட்சத்து 47,944 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களின் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT