முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 537 ஆக உயர்வு 

மகாராஷ்டிரத்தில் மேலும் 47 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

மும்பை: மகாராஷ்டிரத்தில் மேலும் 47 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு வரை கரோனா பாதித்தோர் 490 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மும்பையில் 28 பேரும், மும்பை மாநகராட்சியில் 15 பேரும், புணேவில் 2 பேரும், அமராவதி மற்றும் பிம்ப்ரி சின்ச்வாடியில் தலா ஒருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.