இந்தியா

ஒரே நாளில் 472 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை

DIN


இந்தியாவில் ஒரே நாளில் 472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

இன்றைய தேதி வரை இந்தியாவில் 274 மாவட்டங்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,374 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் கூடுதலாக 472 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 79 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முதல் கூடுதலாக 11 பேர் பலியாகியுள்ளனர். 267 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் 4.1 ஆக உள்ளது. தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த இரட்டிப்பாவதற்கான நாட்கள் 7.4 ஆக இருந்திருக்கும்." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT