இந்தியா

கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி

DIN

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இந்தியாவில் முதல் முறையாக பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகாரின் எந்த பகுதியிலும் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. தற்போது மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.

இதுவரை பிகாரில் 3000 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 2,950 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதித்தவர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் சுமார் நான்கு ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் மரணம் அடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT