இந்தியா

ராஜஸ்தானில் கரோனா பாதித்தவர் பலி; மொத்த பாதிப்பு 274

DIN

ராஜஸ்தானில் கரோனா பாதித்த 60 வயது நபர் பலியான நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. 

கோட்டாவில் உள்ள எம்பிஎஸ் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட 60 வயது நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்தார். 

எனினும், அவருக்கு வேறு பல உடல்நலக் குறைவுகள் இருந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மாநில கூடுதல் முதன்மைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் பேசுகையில், கரோனா தொற்றுக்கு உயிரிழந்த நபர் சமீபத்தில் எந்த வெளிநாட்டுக்கும் சென்று வராத நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுதாக அவர் தெரிவித்தார்.

தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் சிலர், இவர் வசித்த பகுதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் உயிரிழந்தவரின் பயண விவரங்களை குடும்பத்தினர் மறைத்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT