கர்நாடகத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத்துறை
கர்நாடக மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 200 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
அந்தவகையில், கர்நாடகத்தில் நேற்று மாலை முதல் இன்று நண்பகல் வரை புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கர்நாடகத்தில் 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 25 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
பாதித்த 12 பேரில், பகல்கோட்டில் 1, பெங்களூரு நகரத்திலிருந்து இரண்டு மற்றும் பெங்களூரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகும். இவர்கள் தில்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர்.