இந்தியா

ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

DIN

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மேலும் நோய்த் தொற்று தீவிரமாகும் என்ற நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு  ஆலோசித்து வருகிறது. 

ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு  ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஊரடங்கை நீட்டிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT