இந்தியா

உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும் : ராகுல் காந்தி ட்வீட்

DIN

உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையை கருத்தில் கொண்டு மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், அந்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, பாரசிட்டமால், ஹைட்ரோகுளோரோகுயின் ஆகிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையை விலக்கியுள்ளது. 

தொடர்ந்து இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நட்பு என்பது பழி வாங்குவது அல்ல. இக்கட்டான சூழ்நிலையில், தேவைப்படும்போது மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவுவது அவசியம். ஆனால், அதேநேரத்தில், கரோனா விஷயத்தில் தற்போது இந்தியாவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால், உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். நமக்கான தேவை போகத்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும். இந்த சமயத்தில் இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT