இந்தியா

என்95 முகக்கவசத்தை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்: தில்லி எய்ம்ஸ்

DIN


புது தில்லி: என்95 ரக முகக்கவசங்களை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு தில்லி எய்ம்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசங்களைப் பற்றி நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், 95 ரக முகக்கவசங்களை கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்தி, தனி ஒருவர் ஒரு முகக்கவசத்தை தொடர்ந்து 4 முறை பயன்படுத்தலாம், இதையே 20 நாட்களுக்கு பின்பற்றுமாறு எய்ம்ஸ் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளை நேரடியாக எதிர்கொள்ளும் அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் என்95 ரக முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், உறைவிட செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களும் இதில் அடங்குவர்.

ஒவ்வொரு மருத்துவப் பணியாளருக்கும் தலா 5 என்95 ரக முகக்கவசம் வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT