இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், தெலங்கானாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், தெலங்கானாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதில், மொத்தம் 390 பேரில் 175 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். நிசாமாபாத்தில் 36, ரங்கா ரெட்டியில் 34, வாரங்கலில் 25, ஜோகுலம்பா கட்வாலில் 22, மேட்சல் மற்றும் கரீம்நகரில் தலா 18, நல்கொண்டா மாவட்டத்தில் 14 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT