முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி

கர்நாடகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடக் மாவட்டத்தில் 80 வயது பெண் இதய நோய் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 6ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.55க்கு அவர் உயிரிழந்தார். 

இதன்மூலம், கர்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி 181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.