இந்தியா

ஒடிஸாவில் ஏப்.30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

DIN


புவனேசுவரம்: ஒடிஸாவில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, வருகிற 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்த மாநில அரசு வியாழக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இதன் மூலம் நாட்டில் ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலமாகியுள்ளது ஒடிஸா.

ஒடிஸாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது . இதில் 5 மூத்த அமைச்சா்களுடன் முதல்வா் பட்நாயக் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா். இதனைத்தொடா்ந்து அவா் பேசி வெளியிடப்பட்ட காணொலியில், ‘மாநிலத்தில் வருகிற 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தேசிய ஊரடங்கையும் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கிறது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் ஜூன் 17-ஆம் தேதி வரை மூடப்படுகிறது. தற்போதைய சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது ஒன்றே கரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கையில் சிறந்த வழியாகும்.

தேசிய ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கியுள்ள ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலாளா்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை தொடா்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் தொடா்பான பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

மாநிலத்துக்கு வரும் ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றின் சேவைகளை வரும் 30-ஆம் தேதி வரை நிறுத்திவைக்குமாறும் மத்திய அரசிடம் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தேசிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டாா். இதன்படி 21 நாள்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT