இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆகவும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. 

மேலும், நாட்டில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் 504 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இந்தியாவில் சமூகப் பரவல் ஏற்படவில்லை. எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை. அதே நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டால் கரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மேற்குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT