முகப்பு
இந்தியா

குஜராத்தில் 432 பேருக்கு கரோனா உறுதி : 34 பேர் குணமடைந்தனர்

குஜாராத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:


அகமதாபாத்: குஜாராத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதித்தோர் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துவருகின்றது. இந்நிலையில், குஜராத்தில் இதுவரை 432 பேருக்கு கரோனா என்ற கொடிய நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

அகமதாபாத்தில் 31, வதோதரா (18), ஆனந்த் (3), சூரத் மற்றும் பாவ்நகரில் தலா ஒன்றும் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்தார். 

432 பேரில் 379 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இன்று வரை 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கரோனா கொடிய தொற்றுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,593 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,187 பேருக்கு கரோனா இல்லை எனவும், 124 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.