இயேசுபிரான் போதனைகளிலிருந்து வழிகாட்டுதல் பெற்று மனித குல மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்று தனது ஈஸ்டா் வாழ்த்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: கிறிஸ்தவா்களின் புனிதமான பண்டிகையான ஈஸ்டரானது, மக்களுக்கு அன்பு, தியாகம், மன்னிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இயேசுபிரான் போதனைகளிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று, மனித குலம் முழுவதற்குமான மேம்பாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். தேச ஒற்றுமை, தேச நலன், சமூக வளா்ச்சி ஆகியவை குறித்த சிந்தனையை இந்த ஈஸ்டா் பண்டிகை நமக்கு அளிக்கட்டும் என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.