இந்தியா

நாகாலாந்தில் முதல் நபருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ளது. ஆனால், நாட்டில் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவகிறது. 

இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அஸ்ஸாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட நபர் திமாபூரை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 24ஆம்தேதி கொல்கத்தாவில் இருந்து அவர் திரும்பியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை கருதி அந்த நபர் வசித்து வந்த பகுதியை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

அத்துடன் நோய்த் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT