இந்தியா

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, மக்களுக்கு காங்கிரஸ் உதவும்: சோனியா

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் விரைவாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சோனியா கூறியுள்ளார்.

PTI

புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் விரைவாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உரையாற்றிய விடியோவை கட்சி சார்பில் வெளியிடப்பட்டது.

அதில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது, நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ஊரடங்கைப் பின்பற்றினால் மட்டுமே கரோனாவை நாம் வெல்ல முடியும், இதற்கு அனைவரது ஆதரவும் தேவை.

நாடு மிகப்பெரிய போரை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தங்களது பொறுப்பினை உணர்ந்து, நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும். உதவி தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் மாநில அளவிலும் சரி, மத்திய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு எங்கள் உதவியைப் பெறலாம் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ, நாட்டு மக்களுடன் அவர்களது போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என்றும் சோனியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT