ராஜஸ்தானில் புதிதாக 25 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,101 ஆனது
ராஜஸ்தானில் இன்று காலை நிலவரப்படி மேலும் 25 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று காலை நிலவரப்படி மேலும் 25 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டோங்க் (11), ஜோத்பூர் (10), ஜுன்ஜுனுவில் (2), பிகானேர் மற்றும் அஜ்மீரில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இன்று புதிதாக 25 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,101 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
37,860 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 1,101 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 31,902 பேருக்கு கரோனா இல்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4,857 பேரின் மாதிரிகளின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
இதுவரை அம்மாநிலத்தில் 157 பேர் குணமாகியுள்ளனர். அவர்களில் 82 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.