முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 572 ஆனது

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 17 ஏப்ரல், 2020 at 1:10 PM
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கர்னூல் மாவட்டத்தில் மட்டும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இதை அடுத்து, குண்டூரிலும் 4 பேருக்கு கரோனா பாதித்து மொத்த எண்ணிக்கை 126 ஆக உள்ளது. இவ்விரு மாவட்டங்களிலுமே கரோனா பாதிப்பு நூறைக் கடந்துவிட்டது.நெல்லூரில் 64 பேருக்கும், கிருஷ்ணா மாவட்டத்தில் 52 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

ஆந்திரத்தில் இதுவரை 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.