மத்தியப் பிரதேசத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,299 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தூர் மாவட்டத்தில் மட்டும் 842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் திடீரென கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த மாநிலத்தில் 8 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
65 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், சுமார் 1,171 பேர் தற்போது மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நாட்டில் இதுவரை 13 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 437 பேர் பலியாகியுள்ளனர். இதில் கரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.