முகப்பு
இந்தியா

ஒடிசாவில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை 

ஒடிசாவில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு வழக்குகள் பதிவாகவில்லை என்று

Updated On : 17 ஏப்ரல், 2020 at 11:22 AM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு வழக்குகள் பதிவாகவில்லை என்று அம்மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த் தொற்று அம்மாநிலத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், 60 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை 843 பேரின் மாதிரிகளும், புதன்கிழமை 1,197 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Advertisement

ஏப்ரல் 14-ஆம் தேதி 5 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட 7,577 மாதிரிகளில் 7,517 நோய்த் தொற்று எதிர்மறையாக வந்தன. 

பாதிக்கப்பட்ட 60 பேரில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளயுள்ளனர். கரோனாவால் ஒருவர் கூட பாதிக்காத வகையில் அம்மாநில அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு மேம்பாட்டு ஆணையர் எஸ்.சி மொஹாபத்ரா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.