முகப்பு
இந்தியா

தவறான நோக்கத்தோடு லிஃப்டில் எச்சில் துப்பிய வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு

மெங்களூரு அருகே கொடைல்பைல் பகுதியில் உள்ள குடியிருப்பில், தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட இரண்டு வெளிநாட்டினர், லிஃப்டில் துப்பியக் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2020 at 2:41 PM
பகிர்:


மெங்களூரு: மெங்களூரு அருகே கொடைல்பைல் பகுதியில் உள்ள குடியிருப்பில், தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட இரண்டு வெளிநாட்டினர், லிஃப்டில் துப்பியக் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு பேரை, இருக்கும் இடத்திலேயே தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தாங்கள் வசித்து வந்த குடியிருப்பின் லிஃப்டில் பயணித்த இருவரும், ஆங்காங்கே எச்சில் துப்பியக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisement

இதை அடிப்படையாக வைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்த 3 பேர் உட்பட ஐந்து பேரும் மருத்துவமனையில் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.