முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 35 பேர் வீடு திரும்பினர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 35 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். 

Updated On : 18 ஏப்ரல், 2020 at 11:40 AM
பகிர்:


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 35 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை அம்மாநிலத்தில் 1,310 பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தூரில் மட்டும் 892 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 69 பேர் குணமடைந்த நிலையில், 69 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

Advertisement

இந்தூர் மற்றும் கார்கோனில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் குணமாகி சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.