இந்தியா

அறிகுறிகள் இன்றி 186 பேருக்கு கரோனா; தில்லியில் ஊரடங்கை தளர்த்த முடியாது - கேஜரிவால்

DIN

தில்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 'தில்லியில் கரோனா வைரஸ் பரவினாலும், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லியில் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை. 

தில்லியில் 77 இடங்கள் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், தில்லியில் ஊரடங்கை தளர்த்த முடியாது. ஏப்ரல் 27 அன்று  ஊரடங்கு தளர்வு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். 

தில்லியில் புதிதாக கரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளது கவலை அளிக்கிறது. தற்போது 1900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் ஐ.சி.யுவில் உள்ளனர். 6 பேர் வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT