இந்தியா

தில்லியில் கரோனாவுக்கு ஒன்றரை மாதக் குழந்தை பலி

DIN

தில்லியில் பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. ஏப்ரல் 16 ஆம் தேதி குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மருத்துவமனையில் சமீபத்தில் கரோனா தொற்று உறுதியான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முன்னதாக இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்துள்ளது. இதே மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்த மற்றொரு குழந்தைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் கரோனா தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT