இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 1084ஆக உயர்வு

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 1084ஆக உயர்வு

DIN

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

அதில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1084ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 பேர் பலியானநிலையில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT