புது தில்லி: அறிவுறுத்தல்களை மீறி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதன்மைச் செயலாளர்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஏப்ரல் 15ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களை மீறி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கை மேலும் தளர்த்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசு அனுமதி அளித்த பணிகளைத் தவிர, பிற பணிகள் நடைபெறவில்லை என்பதை மாநில / யூனியன் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.