முகப்பு
இந்தியா

புணேவில் மருத்துவமனை ஊழியர்கள் 25 பேருக்கு  கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 19 செவிலியர்கள், 3 உதவியாளர்கள், 3 துணை நிலை ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:36 PM
பகிர்:


புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 19 செவிலியர்கள், 3 உதவியாளர்கள், 3 துணை நிலை ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மருத்துவமனையில் பணியாற்றி வரும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்கள் மூலமாக ஒரு நோயாளிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளியும், பார்வையாளர்களும், ஊழியர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

Advertisement

கரோனா பாதித்து சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட காஸர்வாடி பகுதியில் இருந்து ஒரு ஊழியர் பணிக்கு வந்தார். அவர் மூலமாக இந்த தொற்று பரவியிருக்கிறது. சுமார் ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவருமே நலமாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,666 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.