இந்தியா

தில்லியில் கரோனா பாதிப்பு: தற்போதைய நிலை என்ன?

தில்லியில் கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI


புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

1397 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 78 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நோயாளிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 5 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

தில்லியில் நேற்று துரித பரிசோதனை கருவி மூலம் சுமார் 74 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் அனைவருக்குமே தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, 125 குடும்பங்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT