கொல்கத்தா: கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று, வாகனம் மூலம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொண்டார்.
கொல்கத்தாவின் ராஜாபஜார் பகுதியில் வாகனத்தில் வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வீடுகளுக்குள்ளேயே இருங்கள், கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள் என்று மம்தா பானர்ஜி மக்களுக்கு எடுத்துச் சொல்லி கரோனா குறித்து பிரசாரம் மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.