மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மும்பையில் 1,200 முதல் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்குமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்று தெரிவித்தார்.
ஐஎம்சிடி குழுவினர் நேற்று இரண்டு நாள் பயணமாக மும்பை வந்திருந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
படுக்கை வசதிகளை அதிகரிப்பதும், மும்பையில் திறந்த மைதானங்களில் அதிக அளவில் மக்களை வரவழைத்து கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஎம்சிடி குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.